ராஜபாளையத்தில் ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறிப்பு

ராஜபாளையத்தில் ஆசிரியை நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 7 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
ராஜபாளையத்தில் ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறிப்பு
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் குப்ப ராஜா மடம் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி மீனாள் (வயது 44).

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சொக்கலாம்பட்டியில் உள்ள யூனியன் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிபட்டி நகர்மன்ற நடுநிலைப்பள்ளியில் மீனாளுக்கு பயிற்சி வகுப்பு இருந்தது. இதில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

ராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு வழியாக மீனாள் நடந்து சென்றார். அப்போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 பேர் வந்தனர்.

பி.எஸ்.என்.எல். டவர் அருகே மீனாள் வந்தபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவன் திடீரென மீனாளின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் மீனாள் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com