ராஜபாளையத்தில் போலீஸ் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

ராஜபாளையத்தில் போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜபாளையத்தில் போலீஸ் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் வடகாசிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது32). இவர் கடந்த 2011-ம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சிக்காக சென்னை சென்றார்.

ஆனால் பயிற்சி காலத்தில் இசக்கிமுத்து பாதியிலேயே வந்து விட்டார். இதையடுத்து அவரை காவல்துறை பணி நீக்கம் செய்தது.

இந்த நிலையில் கிடைத்த வேலையை விட்டு விட்டோமே என்ற ஏக்கத்தில் இருந்த இசக்கிமுத்துவிடம் உள்ளாறு கிராமத்தைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவர் மீண்டும் போலீசில் வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு பணம் செலவாகும் என கூறி உள்ளார்.

இதனை நம்பிய இசக்கிமுத்து 2 தவணைகளில் ரூ.3 லட்சத்தை கருத்தப்பாண்டியனிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர் வேலை வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பிதரவில்லை.

இதுகுறித்து கேட்டபோது தன்னை தரக்குறைவாக திட்டி மிரட்டியதாக இசக்கிமுத்து, தென்மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து கருத்தப்பாண்டியை தேடி வருகிறார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com