பிரதமர் மோடி-வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் ராஜபக்சே சந்திப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ராஜபக்சே, இன்று டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார்.
மோடியுடன் ராஜபக்சே சந்திப்பு
மோடியுடன் ராஜபக்சே சந்திப்பு
Published on

புதுடெல்லி:

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று அவருக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி வரவேற்றார். ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் இலங்கை பிரதமர்  ராஜபக்சே மற்றும் அவரது குழுவினர், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினர். ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. 

ராஜபக்சே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com