அம்மா உணவகத்தில் வடை பாயாசத்துடன் உணவு- ராஜன்செல்லப்பா ஏற்பாடு

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் வடை பாயாசத்துடன் சாப்பாடும் வழங்கப்பட்டது.
ராஜன்செல்லப்பா எம்எல்ஏ
ராஜன்செல்லப்பா எம்எல்ஏ
Published on

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் இன்று மதியம் பொதுமக்கள் அனைவருக்கும் வடை பாயாசத்துடன் உணவு வழங்கப்பட்டது. மே 1-ந் தேதி (இன்று) உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதை யடுத்து ஏற்கனவே புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்திலும் புதூர் அம்மா உணவகத்திலும் ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் வடை பாயாசத்துடன் சாப்பாடும் புதூர் அம்மா உணவகத்தில் கேசரியுடன் உணவும் இலவசமாக வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் பகுதி செயலாளர் பன்னீர் செல்வம் மோகன்தாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com