

மதுரை, ஏப். 11-
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சரு மான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக் கிணங்க தமிழகம் முழு வதும் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை வடக்கு தொகுதி யின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நீர்-மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணிப் பழம், வெள் ளரிக்காய், ஆகியவற்றை மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா வழங்கினார்.
நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள், அண்ணா நகர் முருகன், ஜெயவேல், ஒன்றிய செய லாளர்கள் தக்கார் பாண்டி, முருகே சன், ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார். வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வட்ட செயலாளர்கள் கண்ணன், கார்த்திக்முனியசாமி, ஒச்சாத்தேவர், மானகிரி மூர்த்தி, போஸ், காஜா, ஜெயராஜ், தங்கப்பாண்டி, மகேஸ்வரன், ஆறுமுகம், வெங்கடாசலம், ராமன், மகாதேவன், வீரணன், விணுவர்தர்ன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ஜெயலலிதா காட்டிய வழியில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் அம்மா. அதனால் தான் கோடை கால வெயி லிருந்து மக்களின் தாகத்தை போக்க தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நீர்- மோர் பந்தலை திறந்து தாகத்தை போக்கி வந்தார். தற்போது அவரது வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு தமிழகம் முழுவதும் நீர்-மோர் பந்தலை திறந்து வைத்து மக்களின் தாகத்தை போக்கி வருகிறது.
தற்போது காவிரி பிரச்சினையில் தொடர்ந்து தமிழகத்தின் உரிமையை காக்க இந்த அரசு போராடி வருகிறது. ஆனால் தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்த தி.மு.க. தற்போது காவிரி பற்றி அக்கறை கொண்டதுபோல் அறிக்கை விடுவது மிகவும் காமெடியாக உள்ளது.
மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதற்காக தற்போது நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதனை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார் கள். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்குரிய உரிமையை பெற்றுத்தருவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.