ராஜாக்கமங்கலம் அருகே என்ஜினீயர் தற்கொலை

ராஜாக்கமங்கலம் அருகே என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே ஆலங்கோட்டைபுதூரை சேர்ந்த ராஜமணி மகன் பார்த்திபன் (வயது 22). டிப்ளமோ என்ஜினீயரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். அதன்பின்பு வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட அவர், சம்பவத்தன்று இரவு வீட்டில் மேல் மாடியில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com