மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

ராஜகோபாலசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல்பத்து உற்சவம் தொடங்கியது. ராபத்து உற்சவம் 29-ந்தேதி தொடங்குகிறது.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தமிழகத்தில் தலைசிறந்த வைணவ தலமாக போற்றப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல்பத்து உற்சவமும், இதை தொடர்ந்து ராபத்து உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டு ராஜகோபாலசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல்பத்து உற்சவம் தொடங்கியது. 

முன்னதாக ருக்மணி, சத்யபாமா, ராஜகோபாலசாமி கல்யாண திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ராபத்து உற்சவம் வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. 

இதை தொடர்ந்து ராபத்து உற்சவம் 29-ந்தேதி தொடங்குகிறது. அன்று காலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையரும், கோவில் தக்காருமான கிருஷ்ணன், செயல் அலுவலர் சுகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.                            

X

Maalai Malar
www.maalaimalar.com