உ.பி. காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜ்பாப்பர்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜ்பாப்பர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உ.பி. காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜ்பாப்பர்
Published on

சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் மற்றும் புல்பூர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்தது. ஆனால், இந்த இரு தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் தனது டெபாசிட்டை இழந்தது.


இதையடுத்து, உ.பி.யில் காங்கிரஸ் மோசமாக தோல்வி அடைந்ததன் காரணமாக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜ் பாப்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறியதை ஏற்று, கோவா மாநில காங்கிரஸ் தலைவர் சாந்தாராம் நாய்க் (71) தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com