ஆழ்வார்குறிச்சி அருகே மழையில் சுவர் இடிந்து காயமடைந்த பெண் மரணம்

ஆழ்வார்குறிச்சி அருகே கடந்த 2-ந்தேதி பலத்த மழை பெய்தது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
ஆழ்வார்குறிச்சி அருகே மழையில் சுவர் இடிந்து காயமடைந்த பெண் மரணம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பொட்டல் புதூர் பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது42). இவர் கடந்த 2-ந்தேதி வீட்டில் படுத்து இருந்தார்.அப்போது பலத்த மழை பெய்தது. இதில் அவரது வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது.

இதில் செல்லம்மாள் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை செல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com