நீர்பிடிப்பு பகுதியில் மழை - உயர்ந்து வரும் பெரியாறு, வைகை அணை நீர் மட்டம்

நீர்பிடிப்பு பகுதியில் கன மழை நீடிப்பதால் பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை - உயர்ந்து வரும் பெரியாறு, வைகை அணை நீர் மட்டம்
Published on

கூடலூர்:

நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 3025 கன அடியாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து 132.80 அடியாக உள்ளது. அணையில் இருந்து 1850 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது. மூலவைகையாற்று பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாகவும் வைகை அணைக்கு நீர்வரத்து 3159 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 1190 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 60.47 அடியாக உள்ளது.

கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் மழையால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 51 கன அடியாக உள்ளது. நீர்திறப்பு இல்லை. அணையின் நீர்மட்டம் 47.30 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.47 அடியாக உள்ளது. 68 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

தேக்கடி 10.9, கூடலூர் 3.5, உத்தமபாளையம் 1.2, சண்முகாநதி அணை 2, மஞ்சளாறு 47, சோத்துப்பாறை 10, வைகை அணை 11 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com