கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள்: ரெயில்வே அமைச்சகத்துக்கு முதல் இடம்

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் கொண்ட அரசு துறைகளில் ரெயில்வே முதல் இடம் வகிக்கின்றது என சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள்: ரெயில்வே அமைச்சகத்துக்கு முதல் இடம்
Published on

சட்ட அமைச்சகம், கடந்த ஜூன் 2017ம் ஆண்டு தேதியிட்ட ஆவணத்தில் வெளியிட்டுள்ள தகவலில், அரசு அல்லது அதன் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தீர்க்கப்படாமல் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை தெரிவித்து உள்ளன.  அவற்றில், ஜூன் 12 தேதியிட்ட ஆவணத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 60 அரசு வழக்குகள் மற்றும் அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக 369 அவதூறு வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதில், மிக அதிக எண்ணிக்கையிலான தீர்க்கப்படாத வழக்குகள் கொண்ட அரசு துறையாக ரெயில்வே உள்ளது.  அதற்கு எதிராக 66 ஆயிரத்து 685 வழக்குகள் உள்ளன.  மொத்தமுள்ள இந்த வழக்குகளில், 10 வருடங்களை கடந்த நிலையில் 10 ஆயிரத்து 464 வழக்குகள் உள்ளன.

ரெயில்வேக்கு அடுத்த நிலையில், நிதி அமைச்சகம் 15 ஆயிரத்து 646 வழக்குகளும், தகவல் தொடர்பு அமைச்சகம் 12 ஆயிரத்து 621 வழக்குகளும், கொண்டுள்ளன.  உள்துறை அமைச்சகம் 4வது மிக அதிக எண்ணிக்கையிலான 11 ஆயிரத்து 600 தீர்க்கப்படாத வழக்குகளை கொண்டுள்ளன.

கடந்த அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி கூறும்பொழுது, அரசு மிக பெரிய வழக்குதாரராக உள்ளது.  வழக்கின் ஒரு கட்சிக்காரராக அரசு உள்ள நிலையில் அதிலேயே பெரும்பகுதி நேரத்தினை நீதிமன்றம் செலவிட வேண்டியுள்ளது.  இந்த சுமையை குறைத்திட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com