

ரெயில் பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகப் பரவியது. அந்த வீடியோவில், நீல நிற சட்டை அணிந்த ரெயில்வே கேண்டீன் ஊழியர் ஒருவர் ரெயில் கழிவறையில் இருந்து டீ கேன்களில் தண்ணீர் பிடித்து ஒவ்வொன்றாக எடுத்து கொடுக்கிறார். அவற்றை வாசலில் நின்ற மற்றொரு ஊழியர் பெறுகிறார்.
இதன்மூலம் கழிவறையில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடித்து டீ தயாரித்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இனி ரெயிலில் யாராவது டீ குடிப்பார்களா? என்ற கேள்வியும் சமூக வலைத்தங்களில் பரவத் தொடங்கியது. பலர் ரெயில்வே அதிகாரிகள் மீது குற்றம்சாட்டினர்.