தக்கலை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்- போலீஸ் விசாரணை

தக்கலை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரெயில்வே தண்டவாளம்.
ரெயில்வே தண்டவாளம்.
Published on

தக்கலை:

தக்கலை அருகே மேக்கோடு பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே முட்புதரில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தக்கலை போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வாலிபர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் திங்கள்சந்தை மேக்கோடு பகுதியை சேர்ந்த ராமதாஸ் மகன் அபிஷேக் (வயது 23) என்பது தெரியவந்தது.

அபிஷேக்கின் தந்தை ராமதாஸ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தாயார் இல்லாததால் அபிஷேக் உறவினர் பராமரிப்பில் வளர்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அபிஷேக் பலியானது குறித்து வெளிநாட்டில் உள்ள அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டு இன்று சொந்த ஊருக்கு வருகிறார்.

பலியான அபிஷேக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com