அரக்கோணத்தில் மீண்டும் ரெயில் மறியல்- பொதுமக்களை தடியடி நடத்தி கலைத்தது போலீஸ்

அரக்கோணத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். #ArakkonamRailBlockade
அரக்கோணத்தில் மீண்டும் ரெயில் மறியல்- பொதுமக்களை தடியடி நடத்தி கலைத்தது போலீஸ்
Published on

அரக்கோணம்:

அரக்கோணம்- சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாமதமாக வருவதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தவண்ணம் உள்ளனர். சரிசெய்வதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்தபிறகும், ரெயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் போராட்டம் நடத்த தொடங்கி உள்ளனர்.

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு நேற்று காலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு மின்சார ரெயில் நீண்ட நேரமாக வராததால் ஆத்திரமடைந்த பயணிகள், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். ரெயில் சரியான நேரத்தில் வந்து செல்லும் ரெயில்வே அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர். 

இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து வரும் மின்சார ரெயில் தாமதமானதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் காத்திருந்த நூற்றுக்கும் அதிகமான மக்கள், திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.

அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து லேசான தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். இந்த போராட்டம் காரணமாக அரக்கோணம் ரெயில் நிலைய வளாகத்தில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #ArakkonamRailBlockade

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com