

பெருந்தலைவர் ‘கர்ம வீரர்’ காமராஜரின் பிறந்தநாளையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சிறார் - சிறுமியரின் கல்விக் கண்ணை திறந்து வைத்த ‘கர்ம வீரர்’ காமராஜரின் 115-வது பிறந்தநாள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தலைசிறந்த முதல்வராக - தன்னலம் கருதாத தலைவராக - எளிமையும் இனிமையும் ஒருங்கே அமையப்பெற்ற மாமனிதராக வாழ்ந்து மறைந்த காமராஜரின் அருங்குணங்களை குறிப்பிட்டு பல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.