திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்பு

திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்பு
Published on
புதுடெல்லி:

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 8 மாதங்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத்தினர், கட்சியின் முக்கிய தலைவர்கள் தவிர வேறு யாரும் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.

இதற்கிடையில், கருணாநிதியின் 94-வது பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி அவரது வைர விழா கொண்டாடப்படுகிறது. இதில் பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட 7 மாநில முதல்-மந்திரிகள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஜூன் 3-ல் கருணாநிதியின் வைர விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com