என் குடும்பத்தினரை பாதுகாக்க களைப்பின்றி உழைத்த சகோதர, சகோதரிகளுக்கு நன்றி - ராகுல் காந்தி

என்னையும் எனது குடும்பத்தினரையும் பாதுகாக்க களைப்பின்றி உழைத்த சிறப்பு பாதுகாப்பு படை சகோதர, சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தியுடன் ராகுல், பிரியங்கா காந்தி
சோனியா காந்தியுடன் ராகுல், பிரியங்கா காந்தி
Published on

என்னையும் எனது குடும்பத்தினரையும் பாதுகாக்க களைப்பின்றி உழைத்த சிறப்பு பாதுகாப்பு படை சகோதர, சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த ’எஸ்.பி.ஜி.’ எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பை பலமுறை மீறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 ’எஸ்.பி.ஜி.’க்கு மாற்றாக ‘சி.ஆர்.பி.எப்.’ எனப்படும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்பு இவர்களுக்கு இந்தியா முழுவதும் அளிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்றிரவு வெளியிட்டுள்ள பதிவில், ‘என்னையும் எனது குடும்பத்தினரையும் பாதுகாக்க களைப்பின்றி உழைத்த சிறப்பு பாதுகாப்பு படை சகோதர, சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com