டெல்லி இந்தியா கேட் பகுதியில் ராகுல் காந்தி மெழுகுவர்த்தி ஏந்தி நள்ளிரவில் பேரணி

டெல்லி இந்தியா கேட் பகுதியில் ராகுல் காந்தி மெழுகுவர்த்தி ஏந்தி நள்ளிரவில் பேரணி

கத்துவா மற்றும் உனா பகுதிகளில் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களை கண்டித்து டெல்லி இந்தியா கேட் அருகே ராகுல் காந்தி நேற்று நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார். #Delhi #RahulGandhi
Published on

ஜம்மு ஜாஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகியுள்ளவரை விடுவிக்க கோரி அம்மாநில பா.ஜ.க மந்திரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே போல உத்தரப்பிரதேசம் உனா நகரில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்து மரணமடைந்தார்.

இந்த சம்பவங்களை கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com