

தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்ட சில மணி நேரங்களில், அடுத்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக சாடினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கட்டிப்பிடித்ததையும், அதற்கு பின் கண்ணடித்ததையும் ஒட்டுமொத்த நாடும் பார்த்தது. அவர், நாட்டின் மிகப்பெரிய கோமாளி என்பது அனைவருக்கும் தெரியும்’ என்று தெரிவித்தார்.
டெல்லி காங்கிரஸ் பேரரசின் சட்ட வாரிசான ராகுல் காந்தி, காங்கிரஸ் சுல்தானின் மரபுரிமையை பெற்றுக்கொண்டு இருப்பதாக கூறிய சந்திரசேகர் ராவ், இதனால்தான் டெல்லிக்கும், காங்கிரசுக்கும் அடிமையாக வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.