

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் அனைத்தும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ’சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜோசப், ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்கான பெரிய கதவை திறந்துள்ளார். இப்போதே முழு அக்கறையுடன் விசாரணையை தொடங்க வேண்டும். இந்த முறைகேடு பற்றி விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவும் அமைக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது கருத்துக்கு பாஜகவினர் கடுமையான கண்டத்தை தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.