ஆண்டின் இறுதிவரை முதலிடத்தை தக்கவைத்தார், நடால்

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் வெற்றி பெற்றதன் மூலம் இந்த ஆண்டின் இறுதி வரை ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
ஆண்டின் இறுதிவரை முதலிடத்தை தக்கவைத்தார், நடால்
Published on

பாரீஸ்:

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தென்கொரியாவின் சுங் ஹியோனை தோற்கடித்தார்.

இதன் மூலம் இந்த ஆண்டின் இறுதி வரை நடால் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவ்வாறு ஆண்டின் இறுதியை நம்பர் ஒன் இடத்துடன் நடால் நிறைவு செய்வது இது 4-வது முறையாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com