பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காயத்தால் நடால் விலகல்

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி கால்இறுதியில் நேற்று மோத வேண்டியதாக இருந்த நிலையில் காயத்தால் விலகுவதாக நடால் தெரிவித்தார்.
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காயத்தால் நடால் விலகல்
Published on

பாரீஸ்:

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால், கால்இறுதியில் செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச்சுடன் நேற்று மோதுவதாக இருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் அவர் போட்டியில் இருந்து விலகி விட்டார். வலது கால் முட்டியில் காயம் ஏற்பட்டு இருப்பதால், இந்த போட்டியில் இருந்து வேதனையுடன் விலகுவதாக கூறிய 31 வயதான நடால், அடுத்து வரும் ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்றுக்குள் உடல்தகுதியை எட்டிவிடுவேன் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com