லாலாப்பேட்டை அருகே வெறிநாய் தொல்லையால் பொதுமக்கள் பீதி

லாலாப்பேட்டை அருகே வெறிநாய் தொல்லையால் அப்பகுதி பொதுமக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர். எனவே சுற்றி திரியம் வெறி நாய்களை பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெறிநாய்
வெறிநாய்
Published on

லாலாபேட்டை:

லாலாபேட்டை அருகே உள்ள புனவாசிப்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுற்றிதிரிந்து கொண்டிருந்த வெறிநாய்கள் சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்த புனவாசிப்பட்டியை சேர்ந்த பழனியம்மாள் (வயது 65), சீரங்கிஅம்மாள்(60), பெரியம்மாள் (45), ராசுபிள்ளை (70) ஆகிய 4 பேரையும் கடித்துள்ளது. 

இதில் படுகாயமடைந்த 4 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளப்பள்ளி துணை சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வெறிநாய் தொல்லையால் அப்பகுதி பொதுமக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர். எனவே சுற்றி திரியம் வெறி நாய்களை பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com