கலாம் சிலை அருகே வைக்கப்பட்ட பைபிள், குரான் அகற்றம்

ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள கலாம் மணிமண்டபத்தில் அவரது சிலை முன்பு இன்று வைக்கப்பட்ட பைபிள், குரான் அகற்றப்பட்டுள்ளது.
கலாம் சிலை அருகே வைக்கப்பட்ட பைபிள், குரான் அகற்றம்
Published on

ராமேஸ்வரம்:

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பேய்க்கரும்பில் ரூ.15 கோடியில் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் திறந்து வைத்தார். 

மணி மண்டபத்தில் வீணை மீட்டுவது போன்ற கலாம் சிலை வைக்கப்பட்டு இருந்தது. சிலை முன்பு பகவத் கீதை இருந்தது. 

அப்துல் சிலை முன்பு பகவத் கீதை மட்டும் வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து, பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் சிலை அருகே பைபிள், குரானை அவரது அண்ணன் பேரன் சலீம் இன்று வைத்தார். பின்னர் பேசிய அவர், அப்துல் கலாம் அனைத்து மதத்துக்கும் அப்பாற்பட்டவர், அனைவருக்கும் பொதுவானவர் என்று கூறினார்.

இந்நிலையில், கலாம் சிலை முன்பு வைக்கப்பட்ட பைபிள், குரான் அதிரடியாக அகற்றப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இரு நூல்களும் அகற்றப்பட்டன என்று கலாம் பேரன் சலீம் தெரிவித்தார். மேலும், இதனை அரசியலாக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, கலாம் சிலை அருகே பைபிள், குரானை அனுமதியின்றி வைத்ததாக அவரது அண்ணன் மகன் சலீம் மீது காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com