பகவத் கீதை சர்ச்சை: மணிமண்டபத்தில் கலாம் சிலை முன்பு குரான், பைபிளும் வைக்கப்பட்டது

சர்ச்சைகளை தொடர்ந்து ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் திறக்கப்பட்ட அப்துல் கலாம் சிலை முன்பு பகவத் கீதை உடன் குரான், பைபிளும் வைக்கப்பட்டன.
பகவத் கீதை சர்ச்சை: மணிமண்டபத்தில் கலாம் சிலை முன்பு குரான், பைபிளும் வைக்கப்பட்டது
Published on

ராமேஸ்வரம்:

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரூ.15 கோடியில் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் திறந்து வைத்தார். 

பேய்க்கரும்பில் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தில் வீணை மீட்டுவது போன்ற கலாம் சிலை வைக்கப்பட்டு இருந்தது. சிலை முன்பு பகவத் கீதை நூலும் இருந்தது. 

அப்துல் சிலை முன்பு பகவத் கீதை நூல் மட்டும் வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து, பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் சிலை அருகே பைபிள், குரானை அவரது அண்ணன் பேரன் சலீம் வைத்துள்ளார். பின்னர் பேசிய அவர், அப்துல் கலாம் அனைத்து மதத்துக்கும் அப்பாற்பட்டவர், அனைவருக்கும் பொதுவானவர் என்று கூறினார்.

முன்னதாக, அப்துல் கலாம் சிலையில் பகவத்கீதை வைக்கப்பட்டுள்ளது குறித்து அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று பாஜக தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com