கிருஷ்ணகிரி அணையின் மதகு உடைந்த விவகாரம்: பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ‘சஸ்பெண்டு’

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் மதகு உடைந்த விவகாரம் தொடர்பாக பாலசுப்பிரமணியம் என்ற செயற்பொறியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
Published on

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் மதகு நேற்று முன்தினம் மாலையில் உடைந்தது.

இதனால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த வெள்ள நீர் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

உடைந்த மதகையும், அணையையும் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மற்றும் கலெக்டர் கதிரவன், பொதுப்பணித்துறையின் உயர் மட்டக்குழுவினர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

இந்த நிலையில் மதகு உடைந்த சம்பவத்துக்காக பாலசுப்பிரமணியம் என்ற செயற்பொறியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com