

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் ஏப்ரல் 4-ந்தேதி முதல் ஏப்ரம் 15-ந்தேதி வரை காமன்வெல்த் போட்டி நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணிகள் தயாராகி வருகின்றன. பேட்மிண்டன் பிரிவில் இந்திய அணியின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து இடம்பிடித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பயிற்சி மேற்கொண்டபோது வலது கால் முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவோ, தசைநார் கிழிவோ ஏற்படவில்லை.
இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன் காயத்தில் இருந்து குணமடைவேன் என்று பிவி சிந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிவி சிந்து கூறுகையில் ‘‘எனக்கான பயிற்சி சிறந்த முறையில் சென்று கொண்டிருந்தது. துரதிருஷ்டவசமாக எனது முழங்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன் இது சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். முழுவதுமாக குணமடைவேன் என்று நம்புகிறேன்’’ என்றார்.