புழல் அருகே என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை

புழல் அருகே என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

செங்குன்றம்:

சென்னையை அடுத்த புழல் புத்தகம் வெங்கடேசா நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். (30). இவர் கோயம்பேட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் மதுரவாயலை சேர்ந்த சன்மதி (26) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் 2 பேரும் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் சன்மதி மதுரவாயலில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். எனவே விக்னேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கதுரை விசாரணை நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com