புழல் அருகே சவாரி வந்தவர் வீட்டில் நகை திருடிய கார் டிரைவர் கைது

புழல் அருகே சவாரி வந்தவர் வீட்டில் நகை திருடிய கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

செங்குன்றம்:

புழல் அம்பத்தூர் சாலையை சேர்ந்தவர் தசரதன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அமுதா.

இவர்கள் கடந்த ஒரு வருடமாக வெளியில் செல்ல வேண்டும் என்றார் பெரம்பூர் வீனஸ் பூங்கா நகரை சேர்ந்த ராமர் என்பவரது காரில் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் ராமரின் காரில் வெளியில் சென்றனர். பின்னர் இரவு திரும்பி வந்தபோது பீரோவில் இருந்த 6 பவுன் நகையை காணவில்லை.

பீரோவும், வீட்டுக் கதவு உடைக்கப்படாமல் இருந்தது. ஜன்னல் ஓரத்தில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து நகையை திருடி சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர்.

அப்போது கார் டிரைவர் ராமர் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து தசரதன் வீட்டில் நகையை திருடி சென்றிருப்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து 6 பவுன் நகையை மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com