புழலில் வீட்டில் கஞ்சா பதுக்கல் - வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

புழலில் வீட்டில் கஞ்சா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா
கஞ்சா
Published on

செங்குன்றம்:

புழல் அடுத்த புத்தகரம் எலிசபெத் நகரில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக புழல் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் 1½ கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து வீட்டில் இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த காளிஜான், அவரது உறவினர் கிரண்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான இருவரும் ஆந்திர மாநிலம் ஓஸ்கோல் பகுதியில் இருந்த கஞ்சாவை வாங்கி பஸ்சில் கடத்தி வருவதும் பின்னர் இங்கு சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

அவர்களுடன் தொடர்புடைய கஞ்சா வியாபாரிகள் யார்-யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com