புழல் ஜெயிலில் கைதிகள் மோதல்

புழல் ஜெயிலில் கைதிகளிடையே மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புழல் ஜெயிலில் கைதிகள் மோதல்
Published on

செங்குன்றம்:

மணலி காமராஜர் சாலையை சேர்ந்தவர் ரமேஷ். திருட்டு வழக்கில் கைதான அவர் புழல் ஜெயிலில் 1-வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை அவர் அதே பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள காஞ்சீபுரத்தை சேர்ந்த கைதி வினோத்தை தகாத உறவுக்கு அழைத்தார். இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதுபற்றி வினோத் உடன் அடைக்கப்பட்டுள்ள மற்ற கைதிகளுக்கு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கைதிகள் ரமேசை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் ரமேசை மீட்டு ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஜெயிலர் ஜெயராமன் புழல் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வினோத் உள்பட 5 கைதிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com