புழலில் தீயணைப்பு வீரர் தற்கொலை: போலீசார் விசாரணை

புழலில் தீயணைப்பு வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புழலில் தீயணைப்பு வீரர் தற்கொலை: போலீசார் விசாரணை
Published on

செங்குன்றம்:

புழல், லட்சுமிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 46). தண்டையார் பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்தார்.

சேதுராமன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சரிவர பணிக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது.

நேற்று மாலை அவரது மனைவி, 2 மகள்களுடன் காசிமேட்டில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் சேதுராமன் மட்டும் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் திடீரென சேதுராமன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com