புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

சென்னை புழல் சிறையில் விசாரணை கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
Published on

செங்குன்றம்:

ராயப்பேட்டையை சேர்ந்தவர் விமலநாதன் என்கிற சைகோ விமல் (24). திருட்டு வழக்கு தொடர்பாக மறைமலைநகர் போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அவர் தான் அடைக்கப்பட்டிருந்த சிறை வாசலில் அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த சிறை காவலர்கள் அதை பார்த்து விட்டனர். உடனே விமலநாதன் தான் பேசிக் கொண்டிருந்த செல்போனை கழிவறையில் வீசி விட்டார். இதற்கிடையே அதிகாரிகளுடன் வந்து அங்கு சோதனை செய்த போலீசார் கழிவறையில் இருந்து செல்போனை எடுத்தனர்.

இது குறித்து ஜெயிலர் உதயகுமார் புழல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com