புரசைவாக்கத்தில் வங்கி ஊழியர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை

புரசைவாக்கத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரசைவாக்கத்தில் வங்கி ஊழியர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை
Published on

சென்னை:

புரசைவாக்கம் முருகப்பா தெருவில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன் (வயது 58). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டி விட்டுவெளியூர் சென்று இருந்தார்.

இன்று காலை வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 30 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

இதுகுறித்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com