சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகளுடன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் கைது

பஞ்சாப் மாநிலத்தில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த நபர் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையெறி குண்டுகள்
கையெறி குண்டுகள்
Published on

பஞ்சாப் மாநில போலீசார் சரூப் சிங் என்பவரை தர்ன் தரனில் உள்ள ஜோஹல் தை வாலா என்ற கிராமத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அவரிடன் தீவிர விசாரணை நடத்தியதில், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தீவிர செயல்பாட்டில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட பி-86 வகை இரண்டு கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதன்மூலம் மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில டிஜிபி தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com