சாமியாரை அழைத்து வந்து பூஜை செய்த மருத்துவர்- நோயாளி உயிரிழந்த பரிதாபம்

புனேவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சாமியாரை அழைத்து வந்து மருத்துவர் பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாமியாரை அழைத்து வந்து பூஜை செய்த மருத்துவர்- நோயாளி உயிரிழந்த பரிதாபம்
Published on

புனே:

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த சந்தியா சோனவானே என்ற பெண் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மரணத்திற்கு காரணம் இதற்கு முன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவமனையின் மருத்துவர் என சந்தியாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மருத்துவர் சவன் சந்தியாவிற்கு முதலில் சிகிச்சை அளித்து வந்தார். சந்தியாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அவர் உடல் நலம் சரியாகவில்லை. இதனால் அவர் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் டாக்டர் சவன் ஒரு சாமியாரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். சந்தியாவின் உடலில் பேய் இருப்பதாகவும், அதனை விரட்ட வேண்டும் என கூறினார். அந்த சாமியார் சந்தியாவிற்கு எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்தார். அதனை சந்தியாவின் சகோதரர் வீடியோ எடுத்தார். தனது சகோதரி இறந்ததில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் டாக்டர் சவன் மற்றும் அந்த சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் மருத்துவமனைக்கு சம்பந்தம் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவரே மூட நம்பிக்கையின் அடிப்படையின் சாமியாரை அழைத்து வந்து பூஜை செய்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com