புளியரை அருகே வீடு புகுந்து நகை திருட்டு

புளியரை அருகே வீடு புகுந்து ரூ.1 லட்சம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புளியரை அருகே வீடு புகுந்து நகை திருட்டு
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் புளியரை அருகே உள்ள லாலா குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தக்குமார். இவரது மனைவி பானுப்பிரியா (வயது27). இவர்கள் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினர்.

நேற்று காலை பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. உள்ளே பார்த்த போது 50 கிராமம் எடையுள்ள 6 பவுன் தங்க நகை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இதுகுறித்து பானுப்பிரியா புளியரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகைகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com