புளியங்குடி அருகே இளம்பெண் தற்கொலை

புளியங்குடி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

புளியங்குடி:

புளியங்குடி அருகே உள்ளபட்ட குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குருநாதன் (வயது 57). விவசாயியான இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் 2 மகள்கள் திருமணமாகி விட்ட நிலையில் மூன்றாவது மகள் முத்துவேணி (26) கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் முத்துவேணி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் முத்துவேணியை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துவேணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com