கர்நாடக ஐகோர்ட்டில் அடுத்த வாரம் டி.ஐ.ஜி ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்: புகழேந்தி

கர்நாடக ஐகோர்ட்டில் அடுத்த வாரம் டி.ஐ.ஜி ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
கர்நாடக ஐகோர்ட்டில் அடுத்த வாரம் டி.ஐ.ஜி ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்: புகழேந்தி
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளரும். செய்தி தொடர்பாளருமான புகழேந்தி இன்று நிருபரிடம் கூறியதாவது:-

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரு.2 கோடி லஞ்சம் வாங்கியதாக சிறைத்துறை டி.ஜி.பி.சத்திய நாராயணராவ் மீது ஆதாரம் இல்லாமல் டி.ஐ.ஜி ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.

அவர் வகிக்கும் அரசு பொறுப்புக்கு மாறாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தும் வருகிறார். அவரிடம் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு 2 நாளில் வக்கீல் நோட்டீசு அனுப்புவேன். அவர் பதில் அளிப்பதை பொறுத்து அடுத்த வாரம் அவர் மீது என் சார்பிலும், அ.தி.மு.க. அம்மா அணி சார்பிலும் கர்நாடக ஐகோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com