புதுக்கோட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி தலைமையாசிரியை பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி தலைமையாசிரியை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம காய்ச்சலுக்கு பலியான தலைமை ஆசிரியை மலர்விழி.
மர்ம காய்ச்சலுக்கு பலியான தலைமை ஆசிரியை மலர்விழி.
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் குன்றாண்டார்கோவில் உதவி தொடக்ககல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மலர்விழி (வயது50). இவர் ஆலங்குடி அருகேயுள்ள ஆலங்காடு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் மலர் விழி மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. மேலும் காய்ச்சல் தீவிரம் அடைந்ததால் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மலர்விழி பரிதாபமாக இறந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com