

புதுவை, காந்தி வீதி திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில், 40-ம் ஆண்டு மகோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, பஞ்சமூர்த்தி மற்றும் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதிவுலா நடந்தது. உற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை 7 மணிக்கு சந்திரசேகரர் வெள்ளி பல்லக்கில் வீதியுலா,
காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிவுலா நடக்கிறது. வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம், இரவு 7 மணிக்கு அறுபத்து மூவர் வீதியுலா நடக்கிறது.
30-ந் தேதி காலை 7 மணிக்கு திருத்தேர் வீதியுலா, ஜூன் 1-ந் தேதி இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம், 3-ந் தேதி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 4-ந் தேதி இரவு 7 மணிக்கு சண்டிகேஸ்வரர் உற்சவம், 5-ந் தேதி இரவு 7 மணிக்கு திருமுறை உற்சவம், 6-ந் தேதி காலை 9 மணிக்கு சங்காபிஷேகம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜேஸ் கண்ணா, அர்ச்சகர்கள் குருமூர்த்தி, சந்திர மோகன், கல்யாணசந்தரம் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.