எம்.ஐ.டி கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

புதுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில் நுட்பப் கல்லூரியின் டீன் டாக்டர் சிவசத்யா தொடக்க உரையாற்றினார்.புதுச்சேரி மாநில மையத்தின் கவுரவ செயலாளர் டாக்டர் கணேசன் என்ற சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
எம்.ஐ.டி கல்லூரியில் பயிற்சிப் பட்டறை நடந்த போது எடுத்த படம்.
எம்.ஐ.டி கல்லூரியில் பயிற்சிப் பட்டறை நடந்த போது எடுத்த படம்.
Published on

 புதுச்சேரி:

புதுவை கலிதீர் தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட்ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி), தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் (இந்தியா), புதுச்சேரி மாநில மையத்துடன் இணைந்து, கணினி அறிவியல் பொறியியல் பிரிவு வாரியம் கீழ் "இயந்திர கற்றல் கருத்துக்கள் மற்றும்பயன்பாடுகள்", என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடத்தியது.

பயிலரங்கில் தலைமை விருந்தினராக புதுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில் நுட்பப் கல்லூரியின் டீன் டாக்டர் சிவசத்யா தொடக்க உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் மற்றும்பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண், தலைமையுரை ஆற்றினார்.

புதுச்சேரி மாநில மையத்தின் தலைவர் திருஞானம் வரவேற்பு ரையாற்றினார்.

எம்.ஐ.டி. கல்லூரி இயந்திரவியல் துறை தலைவரும் புதுச்சேரி மாநில மையத்தின் கவுன்சில் உறுப்பினருமான ராஜாராம் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சிவக்குமார் பயிலரங்கம் பற்றிய அறிமுக உரையாற்றினார்.

முடிவில் புதுச்சேரி மாநில மையத்தின் கவுரவ செயலாளர் டாக்டர் கணேசன் என்ற சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com