தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

முத்தியால்பேட்டையில் மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் பூக்கடை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த நிலையில் கண்ணன் வீட்டிலேயே மது வாங்கி வந்து குடித்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

முத்தியால்பேட்டையில் மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் பூக்கடை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுவை முத்தி யால்பேட்டை வசந்தம் நகர் நிலா தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கண்ணன். இவர் புதுவை பெரியமார்கெட்டில் ஒரு பூக்கடையில் தொழிலா ளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். 2 மகன்கள் உள்ள நிலையில் இப்படி குடித்து செலவு செய்தால் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்று ஜெயந்தி கணவரை திட்டினார்.

இந்த நிலையில் கண்ணன் வீட்டிலேயே மது வாங்கி வந்து குடித்தார். இதனை அவரது மனைவி ஜெயந்தி கண்டித்து விட்டு தனது இளையமகன் படித்த பள்ளிக்கு அழைத்து சென்றார். பின்னர் ஜெயந்தி வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஜெயந்தி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது சமையல் அறையில் உள்ள ஜன்னலில் கணவர் கண்ணன் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com