வீட்டில் மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

புதுவை வில்லியனூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது 48) தச்சு தொழிலாளி. இவர் குடிபழக்கம் உடையவர். கோமதி, கணவரை உடனே அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை வில்லியனூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது 48) தச்சு தொழிலாளி. இவர் குடிபழக்கம் உடையவர். இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக வீரமணி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். கடந்த வாரம் கோமதி மன்னார்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.நேற்று காலை கோமதிக்கு போன் செய்த வீரமணி எப்போது ஊருக்கு வருவாய் என கேட்டுள்ளார். அப்போது கோமதி புறப்பட்டு விட்டேன், மாலைக்குள் வந்துவிடுவேன் என கூறியுள்ளார். 

ரெயிலில் கோமதி புதுவை வந்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் அவருக்கு போன் செய்து அப்பா மயக்கத்தில் இருப்பதாக கூறியுள்ளார். கோமதி, கணவரை உடனே அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

அவரது மகன்கள் வீரமணியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வீரமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com