சபாநாயகர் பதவி யாருக்கு?: முதல்-அமைச்சர் ரங்கசாமி பதில்

அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி. எல்லா அமைச்சரும் பொறுப்பேற்று செயல்பட உள்ளனர்.
ரங்கசாமி
Published on

புதுவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நடந்தது.

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா முடிந்தவுடன், சட்டசபைக்கு வந்தனர். புதிய அமைச்சர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகர் ஆகியோரை அவர்களது அறையில், இருக்கையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்பு முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி. எல்லா அமைச்சரும் பொறுப்பேற்று செயல்பட உள்ளனர். நல்ல முறையில் இந்த அமைச்சரவை, முழுமையாக சிறப்பாக செயல்பட்டு மக்களுடைய நலனுக்காக பாடுபடும். விரைவில் அமைச்சருக்கான இலாக்கா ஒதுக்கப்படும். சபாநாயகர் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

சபாநாயகர் பதவி என்.ஆர்.காங்கிரசுக்கு வழங்கப்படுமா? பாஜகவுக்கு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, கொடுக்கும் போது பாருங்கள் என்று ரங்கசாமி பதிலளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com