ஏம்பலம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள்

லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. வழங்கினார்42 பேருக்கு ரூ‌ 25 ஆயிரம் விதம் ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
ஏம்பலம் தொகுதியில் லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.
ஏம்பலம் தொகுதியில் லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் சட்டமன்ற அலுவலகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் வறுமை கட்டுக்கு கீழே உள்ள மணப்பெண்ணின் குடும்பத்திற்கு 42 பேருக்கு ரூ 25 ஆயிரம் விதம் ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

மேலும் விதவைப் பெண்களுக்கான உதவித்தொகை 20 பேருக்கு ரூ. 2 ஆயிரத்திற்கான சான்று வழங்கினார். நிகழ்ச்சியில் ஏம்பலம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com