ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை

அசோக்பாபு மற்றும் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினர்.இலவச சீருடைகள் , பொதுமக்களுக்கு சர்க்கரை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
 ஆட்டோ டிரைவர்களுக்கு அசோக் பாபு எம்.எல்.ஏ., பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் ஆகியோர் சீருடை வழங்கிய காட்சி. 
 ஆட்டோ டிரைவர்களுக்கு அசோக் பாபு எம்.எல்.ஏ., பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் ஆகியோர் சீருடை வழங்கிய காட்சி. 
Published on

புதுச்சேரி:

முதலியார்பேட்டை தொகுதி பா.ஜனதா சார்பில் நயினார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் தொழி லாளர்களுக்கு இலவச சீருடைகள் , பொதுமக்களுக்கு சர்க்கரை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா நகர மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அசோக்பாபு மற்றும் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினர்.

தொடர்ந்து பாரத பிரதமர் மோடியின் சாதனை ஆட்சியின் கையேடுகள், வீடு வீடாக சென்று ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சிகள் கேந்திர பொறுப்பாளரும் தொகுதி பொதுச் செயலாளருமான விஜயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி தலைவர் இன்பசேகர் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிகளில் தலைமை அலுவலக பொறுப்பாளர் மகேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், பச்சையப்பன், பிரவீன்குமார், மாநில மகளிர் அணி துணைத் தலைவி கீதா சிவனேசன், ஓ.பி. .சி அணி மாவட்ட துணைத் தலைவி மஞ்சுளா, மாவட்ட மகளிர் அணி தலைவி புவனேஸ்வரி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வாசுகி,

கிளை நிர்வாகிகள் சுதாகர் ,முருகன், உதயசங்கர், முனிராஜா, சரவணன், திலகா, மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் முருகன், நிர்வாகிகள் ராஜசேகரன், மணிவண்ணன், கஜேந்திரன், மூர்த்தி, செந்தில்குமார் மற்றும் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com