காஞ்சிபுரம் ரோஸ் பிரதர்ஸ் அணிக்கு கோப்பை

தாகூர் அரசு கலை கல்லூரியில் மறைந்த ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. விழாவுக்கு ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.
கிரிகெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கிய காட்சி.
கிரிகெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை தாகூர் அரசு கலை கல்லூரியில் மறைந்த ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. கிரிக்கெட் போட்டியில் 70 அணிகள் பங்கேற்றன. போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.

புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காஞ்சிபுரம் ரோஸ் பிரதர்ஸ் அணிக்கு முதல் பரிசும், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவை ரேசிங் காய்ஸ் அணிக்கு 2-ம் பரிசும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் வேலூர் ஆற்காடு யங்ஸ்டர்ஸ் அணிக்கு 3-ம் பரிசும், கோப்பையும் வழங்கினர்.

புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. துணைத் தலைவர் மலர்மன்னன் புதுவை 11 பிளாஸ்டர் அணிக்கு 4-ம் பரிசும், தொழிலதிபர் ஜெயக்குமார் புதுவை பாசிட்டிவ் எனர்ஜி அணிக்கு 5-ம் பரிசும் வழங்கினர்.

விழாவில் புதுவை பல்கலைக்கழகம் கம்யூனிட்டி கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் ஜெகதீஸ்வரி, புதுச்சேரி பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இயக்குனர் இளையராஜா, ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஞான சேகரன், தமிழ்ச்செல்வன், ஜான்சன் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com