படகு குழாமில் வெயிலால் சுற்றுலா பயணிகள் அவதி

படகு குழாமில் வார விடுமுறை நாட்களில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.வெயிலில் நீண்டநேரம் காத்திருந்ததால் அவதியடைந்தனர்.
படகு சவாரிக்காக வெயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள்.
படகு சவாரிக்காக வெயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள்.
Published on

புதுச்சேரி:

புதுவை-கடலூர் சாலையில் உள்ள நோணாங்குப்பம் படகு குழாமில் வார விடுமுறை நாட்களில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விடுமுறை நாட்களான சுற்றுலா பயணிகள் அதிகளவில் படகு குழாமில் குவிந்திருந்தனர்.

படகில் ஏறி பேரடைஸ் தீவுக்கு சென்று கடலில் குளித்து விளையாடி மகிழ்ந்தனர். இதனால் படகிற்காக நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

அவர்கள் வெயிலில் நீண்டநேரம் காத்திருந்ததால் அவதியடைந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 2 நாட்கள் படகு குழாமில் ரூ.9 லட்சம் வருவாய் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com