கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல்

புது வீட்டில் மது குடித்து ரகளை செய்ததை தட்டிக்கேட்ட கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.வீட்டில் கடந்த சில நாட்களாக சிலர் மது குடித்து விட்டு காலி பாட்டில்களை வீசுவது உள்ளிட்ட தகாத சம்பவங்களை செய்து வந்தனர்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

புது வீட்டில் மது குடித்து ரகளை செய்ததை தட்டிக்கேட்ட கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுவை வம்பாகீரப் பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குட்டியாண்டி. இவரது மனைவி புஷ்ப வாணி(வயது28) குட்டியாண்டி கப்பலில் வேலை செய்து வருகிறார். இவர்கள் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்கள். அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக சிலர் மது குடித்து விட்டு காலி பாட்டில்களை வீசுவது உள்ளிட்ட தகாத சம்பவங்களை செய்து வந்தனர். இதனை அவ்வப்போது புஷ்பவாணி சுத்தம் செய்து விட்டு வருவார்.

இந்த நிலையில் குட்டியாண்டியும், அவரது மனைவி புஷ்பவாணியும் புதிய வீட்டை பார்வையிட சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மலர்மாறன் மற்றும் முகேஷ் ஆகியோர் இந்த வீட்டில் சிகரெட் புகைத்துகொண்டிருந்தனர். இதனை கணவன்-மனைவி இருவரும் தட்டிக்கேட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த மலர்மாறன் மற்றும் முகேசும் சேர்ந்து அங்கு கிடந்த வானலை எடுத்து புஷ்பவாணியின் தலையில் தாக்கினர். இதனை குட்டியாண்டி தடுத்தப்போது அவரையும் சரமாரியாக தாக்கினர்.

மேலும் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு மலர்மாறனும், முகேசும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இதுகுறித்து புஷ்பவாணி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மலர்மாறன் மற்றும் முகேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com